சுமித் நாகல் 
விளையாட்டு

மான்டி கார்லோ டென்னிஸ் பிரதான சுற்றில் வென்ற முதல் இந்தியர் - சுமித் நாகல் சாதனை

செய்திப்பிரிவு

மான்டி கார்லோ: நடப்பு மான்டி கார்லோ டென்னிஸ் மாஸ்டர்ஸ் தொடரின் பிரதான (மெயின் டிரா) சுற்றுக்கான முதல் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் இந்தியாவின் சுமித் நாகல். இதன் மூலம் பிரதான சுற்றில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியை முதல் சுற்றில் வீழ்த்தி இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

உலக தரவரிசையில் 95-வது இடத்தில் உள்ள சுமித் நாகல், மான்டி கார்லோ தொடரின் பிரதான சுற்றில் விளையாடும் மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக 1977-ல் விஜய் அமிர்தராஜ் மற்றும் 1982-ல் ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோர் விளையாடி உள்ளனர். கடந்த 1990-மாவது ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 தொடரில் களிமண் களத்தில் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் நாகல் படைத்துள்ளார்.

உலக தரவரிசையில் 35-வது இடத்தில் உள்ள மேட்டியோ அர்னால்டியை 5-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் அவர் வீழ்த்தினார். அடுத்த சுற்றில் டென்மார்க்கின் ஹோல்கர் ரூனை அவர் எதிர்கொள்கிறார். முன்னதாக, பிரதான சுற்றுக்கு தகுதி பெற இத்தாலியின் ஃபிளேவியோ கோபோலிய மற்றும் அர்ஜென்டினாவின் அகோஸ்டாவை அவர் வீழ்த்தி இருந்தார். களிமண் களத்தில் நடைபெறும் இந்த தொடரில் தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் பங்கேற்று விளையாடுவார்கள்.

SCROLL FOR NEXT