விளையாட்டு

போதைப்பொருள் சோதனைக்காக நியூசி. கிரிக்கெட் வீரர் மட்டையில் ஓட்டைகளைப் போட்ட யு.எஸ். அதிகாரிகள்

செய்திப்பிரிவு

அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளின் அராஜகமான சோதனை முறைகள் பல சமயங்களில் கடும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் வீரருக்கும் அத்தகைய சோதனை நடந்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார் நியுசீலாந்து வீரர் ஜிம்மி நீஷம்.

யு.எஸ். வழியாகவே இவர் செல்ல வேண்டும். அப்படிச் செல்லும் போது இவரது பைகளை சோதனையிட்ட விமான நிலைய அதிகாரிகள் போதைப்பொருள் இருக்கிறதா என்று பார்க்க அவரது பேட்டில் ஓட்டைகளைப் போட்டுள்ளனர்.

கிரிக்கெட் மைதானத்திற்கு வந்து பேட்டை எடுத்துப் பார்த்த நீஷம் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தனது மட்டைக்கு நடந்த இந்த ‘ட்ரில்’-ஐ அவர் படத்துடன் ட்வீட் செய்துள்ளார்.

SCROLL FOR NEXT