ஷிவம் மாவி 
விளையாட்டு

காயம் காரணமாக ஷிவம் மாவி விலகல்

செய்திப்பிரிவு

லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி விலா எலும்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து முழுமையாக விலகி உள்ளார்.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான ஷிவம் மாவி, கடைசியாக 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருந்தார். ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் குஜராத் அணியில் இடம் பெற்றிருந்த அவர், ஒரு ஆட்டத்தில் கூட களமிறக்கப்படவில்லை. இந்த சீசனுக்கு ஷிவம் மாவியை ரூ.6.40 கோடிக்கு வாங்கியிருந்தது லக்னோ அணி.

SCROLL FOR NEXT