விளையாட்டு

ஃபிபா ஆசியாவுக்கு பிஎப்ஐ கண்டனம்

செய்திப்பிரிவு

கத்தார் தலைநகர் தோஹாவில் 18 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் விளையாடி வரும் இந்திய வீரர் அன்மோல் சிங், தலைப்பாகை அணிந்து விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஃபிபா ஆசியாவின் (ஆசியாவுக்கான கூடைப்பந்து சம்மேளனம்) இந்த நடவடிக்கைக்கு இந்திய கூடைப்பந்து சம்மேளனம் (பிஎப்ஐ) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது அநாகரிகமான நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை பாரபட்சமானது, அவமானத்துக்குரியது என பிஎப்ஐ குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் சீக்கிய வீரர்களுக்கு எதிராக பாரபட்சமாக செயல்படும் போக்கை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பிஎப்ஐ கேட்டுக்கொண்டுள்ளது.

ஸ்பெயினின் செவில்லேவில் நடைபெறவுள்ள ஃபிபா மத்திய வாரியக் கூட்டத்தின்போது இந்த பிரச்சினையை எழுப்புவோம் என ஃபிபா ஆசியாவின் தொழில்நுட்ப கமிஷன் இயக்குநர் உறுதியளித்துள்ளதாக பிஎப்ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT