விளையாட்டு

IPL 2024 | ஓவருக்கு 2 பவுன்ஸர்களுக்கு அனுமதி

செய்திப்பிரிவு

ஐபிஎல் தொடரில் இம்முறை பந்து வீச்சாளர்கள் 2 பவுன்ஸர்களை வீச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த சீசன்களில் ஒரு முறை மட்டு பவுன்ஸர் வீச அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இம்முறை விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓவருக்கு ஒரு பவுன்ஸர் மட்டுமே வீச அனுமதி உண்டு. ஆனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பிசிசிஐ இந்த ஆண்டு சையது முஸ்டாக் அலிடி 20 தொடரில் 2 பவுன்ஸர்களை வீச அனுமதித்தது.

இதன் தொடர்ச்சியாக இந்த விதிமுறையை ஐபிஎல் தொடருக்கும் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் இறுதிக்கட்ட ஓவர்களில் பந்து வீச்சாளர்கள் பவுன்ஸர்களை முக்கியமான ஆயுதமாக பயன்படுத்தக்கூடும். எந்த ஒரு பந்து வீச்சாளரும் குறிப்பிட்ட பேட்ஸ்மேனை குறிவைத்தும் செயல்பட முடியும். இந்த விதியுடன் களநடுவரால் ஸ்டம்பிங் செய்ய பரிந்துரைக்கப்படும் போது கேட்சை சரிபார்க்கும் விதியையும் ஐபிஎல் தொடரில் தொடர பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

SCROLL FOR NEXT