பஸ்டோ அர்சிஸியோ: இத்தாலியின் பஸ்டோ அர்சிஸியோ நகரில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி குத்துச்சண்டைக்கான தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 71 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிஷாந்த் தேவ் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் கிரீஸ் வீரர் கிறிஸ்டோஸ் கரைடிஸுடன் மோதினார். இதில் 23 வயதான நிஷாந்த் தேவ் 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
கால் இறுதி சுற்றில் நிஷாந்த் தேவ், அமெரிக்காவின் உமாரி ஜோன்ஸுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். இதில் வெற்றி பெறும் பட்சத்தில் நிஷாந்த் தேவ் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெறுவார்.