விளையாட்டு

ஸ்டூவர்ட் பிராடுக்கு அறுவை சிகிச்சை

செய்திப்பிரிவு

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் முடிந்ததும் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யவிருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்யவிருக்கிறேன். கடைசி டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஸ்வீடனைச் சேர்ந்த மருத்துவர் எனது முழங்காலை சோதனை செய்யவுள்ளார். அவர் என்ன சொல்கிறார் என்பதைப் பொறுத்து டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்வதா அல்லது ஒருநாள் தொடருக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்வதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT