விளையாட்டு

விசா பெறுவதில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ரெஹான் அகமதுவுக்கு சிக்கல்

செய்திப்பிரிவு

ராஜ்கோட்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3-வது டெஸ்ட் வரும் 15-ம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொடங்கவுள்ள நிலையில் இங்கிலாந்து அணி ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு பயிற்சிக்காக சென்று இருந்தது.

இந்நிலையில் நேற்று அந்த அணியினர் ராஜ்கோட்டிலுள்ள ஹிராசர் விமானநிலையத்தில் வந்து இறங்கினர். இந்நிலையில் இங்கிலாந்து வீரர் ரெஹான் அகமதுவுக்கு ஒருமுறை மட்டுமே வந்து செல்லும் விசா வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர் விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

பிசிசிஐ அதிகாரிகளின் தலையீட்டுக்குப் பின்னர் அவர் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு விசா கேட்டு மீண்டும் விண்ணப்பம் அனுப்பும் பணிகளை தொடங்குமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரிகளை பிசிசிஐ அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில் ரெஹான் அகமது, அணி வீரர்களுடன் இணைந்துள்ளார். அவர் இன்று ராஜ்கோட்டில் நடைபெறும் வலைப்பயிற்சியில் பங்கேற்பார் என பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT