சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் ட்ரோம் அகாடமியில் வரும் 15, 16, 17 ஆகிய தேதிகளில் பேட்டிங் தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் கிரிக்கெட் வீரர் எஸ்.பத்ரிநாத் பங்கேற்கிறார். பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு வீரரின் ஆட்ட நுணுக்கங்கள் குறித்தும் வீடியோ மூலம் ஆராய்ந்து, பின்னர் அவர்களுடைய பேட்டிங் திறனை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை பத்ரிநாத் வழங்குகிறார். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு பி.சீனிவாசனை (9940576391, +91-44-65654555/65656536) தொடர்புகொள்ளலாம்.