விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுடன் டெஸ்ட்: நியூஸிலாந்து அபார ஆட்டம் - இரட்டை சதம் விளாசிய ரச்சின்

செய்திப்பிரிவு

மவுண்ட் மாங்கனு: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் னால் இறுதியில் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. இன்று அதிகாலை இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் இரட்டை சதம் விளாசினார் ரச்சின் ரவீந்திரா.

இந்தப் போட்டி நியூஸிலாந்தின் மவுண்ட் மாங்கனுவில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணியின் டாம் லேதம் 20, டெவன் கான்வே ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அபாரமாக விளையாடி சதமடித்தனர். ஆட்டநேர இறுதியில் கேன் வில்லியம்சன் 112 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 118 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்காவின் ஷெப்போ மோரேக்கி, டேன் பேட்டர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பிராட்மேன், கோலியை முந்தினார்: இந்த ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் எடுத்த சதம் அவரது 30-வது சதமாக அமைந்தது. இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்களை விளாசியுள்ள ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன், இந்தியாவின் விராட் கோலி ஆகியோரின் சத சாதனையை முறியடித்து முன்னேறியுள்ளார் வில்லியம்சன்.

இரண்டாம் நாள் ஆட்டம்: வில்லியம்சன் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம் பதிவு செய்த நிலையில், தொடர்ந்து விளையாடி வருகிறார். இரண்டாம் நாளில் 138.5 ஓவர்களுக்கு 6 விக்கெட்கள் இழப்புக்கு 474 ரன்கள் எடுத்துள்ளது.

SCROLL FOR NEXT