இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணி கேப்டன்கள் 
விளையாட்டு

SL vs AFG முதல் டெஸ்ட் | 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆப்கானிஸ்தான் அணி

செய்திப்பிரிவு

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆப்கானிஸ்தான் அணி.

கொழும்பு நகரில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 62.4 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 139 பந்துகளில், 13 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் விஷ்வாபெர்னாண்டோ 4 விக்கெட்களையும், அஷிதாபெர்னாண்டோ, பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதன் பின்னர் விளையாடிய இலங்கை அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்தது. நிஷன் மதுஷ்கா 36, திமுத் கருணரத்னே 42 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 118 ரன்கள் பின்தங்கியுள்ள இலங்கை அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

SCROLL FOR NEXT