விளையாட்டு

ஆஸ்திரேலியன் ஓபன்: சபலெங்கா சாம்பியன்

செய்திப்பிரிவு

மெல்பர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலெங்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் பெலாரஸ் வீராங்கனை சபலெங்காவும், சீன வீராங்கனை ஜெங் கின்வெனும் மோதினர்.

இதில் சபலெங்கா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் சீன வீராங்கனை ஜெங்கை வென்று பட்டத்தைக் கைப்பற்றினார். இவர் வெல்லும் 2-வது ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும் இது.

SCROLL FOR NEXT