கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி தோல்வி கண்டது.
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இறுதிச் சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது, சீனாவின் வாங் சாங், லியாங் வெய்கிங் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
இதில் சீனாவின் வாங் சாங், லியாங் ஜோடியானது 21-9,21-18, 21-17 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தியது.