விளையாட்டு

பாதுகாப்பு பிரச்சினை: சென்னையில் இருந்து கிளம்பியது இலங்கை அணி

செய்திப்பிரிவு

இலங்கையில் இருந்து 15 வயதுக்குட்டபட்ட வீரர்கள் அடங்கிய கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்தது. ஜேஎம் ஹாரூன் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வந்த இந்த அணி பாதுகாப்பு பிரச்சினை காரணமாக திங்கள்கிழமை மீண்டும் இலங்கைக்கு திரும்ப அனுப்பப்பட்டது.

இலங்கை தமிழர்கள் பிரச்சினையால் தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான உணர்வு உள்ள நிலையில், சமீபத்தில் இலங்கை அரசின் பாதுகாப்புத் துறை இணையதளத்தில் தமிழக முதல்வரை அவமதிக்கும் வகையில் கட்டுரை வெளியாகி இருந்தது. இது தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிரான கோபத்தை மேலும் அதிகரிப்பதாக அமைந்தது.

SCROLL FOR NEXT