விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டி பளுதூக்குதல் அணி அறிவிப்பு

செய்திப்பிரிவு

தென் கொரியாவின் இன்சியோன் நகரில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் 10 பேர் கொண்ட இந்திய பளுதூக்குதல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 7 பேர் சமீபத்தில் முடிவடைந்த காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்கள் ஆவர். ஆடவர் பிரிவில் 5 பேரும், மகளிர் பிரிவில் 5 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியில் இடம்பெற்றிருப்பவர்களில் கவிதா தேவி (85 கிலோ எடைப் பிரிவு) மட்டுமே காமன்வெல்த் போட்டியில் பங்கேற்காதவர். இந்திய வீரர், வீராங்கனைகள் காமன்வெல்த் போட்டியில் தங்களுடைய திறமையை நிரூபித்ததால், ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக தனியாக அணித் தேர்வநடைபெறவில்லை. காமன்வெல்த் போட்டிக்காக நடத்தப்பட்ட அணித் தேர்வு முகாமின் அடிப்படையிலேயே இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அணி விவரம்

ஆடவர் பிரிவு: சுகன் தேய் (56 கிலோ), ரஸ்டம் சாரங் (62 கிலோ), சதீஷ் சிவலிங்கம் (77 கிலோ), ரவிக்குமார் (77 கிலோ), விகாஸ் தாக்குர் (85 கிலோ).

மகளிர் பிரிவு: சஞ்ஜிதா சானு (48 கிலோ), மீராபாய் சானு (48 கிலோ), பூனம் யாதவ் (63 கிலோ), வந்தனா குப்தா (63 கிலோ), கவிதா தேவி (75 கிலோ).

SCROLL FOR NEXT