ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் கணுக்கால் காயம் காரணமாக ஜிம்பாப்வேயில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பில் ஹியூஸ் சேர்க்கப்பட்டுள்ளார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பிரிஸ்பேனில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது வாட்சன் பந்தை காலால் மிதித்துவிட்டார். அப்போது அவருடைய கணுக்கால் திருகி காயம் ஏற்பட்டது. அவருடைய கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளதோடு, கடுமையான வலியும் இருக்கிறது. அவர் குணமடைய சில நாட்கள் ஆகும். அதனால் அவருக்குப் பதிலாக பில் ஹியூஸை சேர்த்துள்ளோம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியிருக்கிறது.
ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முத்தரப்புத் தொடர் வரும் 25-ம் தேதி ஜிம்பாப்வேயில் தொடங்குகிறது.