விளையாட்டு

பெட்ராவுக்கு 2-வது கிராண்ட்ஸ்லாம்

செய்திப்பிரிவு

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக்.குடியரசின் பெட்ரா விட்டோவா சாம்பியன் பட்டம் வென்றார்.

சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் விட்டோவா 6-3, 6-0 என்ற நேர் செட்களில் கனடாவின் யூஜீனி புச்சார்டை தோற்கடித்தார். இதன்மூலம் 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார் பெட்ரா. அவருடைய 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுமே விம்பிள்டனில் வென்றதுதான். கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் கனடா வீராங்கனையான புச்சார்டின் ஆட்டம் விட்டோவாவிடம் எடுபடவில்லை.

ஆடவர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி யுள்ளனர். இவர்களுக்கு இடையிலான இறுதியாட்டம் இன்று நடைபெறுகிறது.

அரையிறுதியில் உலகின் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் 6-4, 3-6, 7-6 (2), 7-6 (7) என்ற செட் கணக்கில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவையும், ரோஜர் ஃபெடரர் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் கனடாவின் மிலோஸ் ரயோனிச்சையும் தோற்கடித்தனர்.

SCROLL FOR NEXT