பெர்த்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் பெர்த் நகரில் இன்று தொடங்குகிறது. பாகிஸ்தான் அணி ஷான் மசூத் தலைமையில் களமிறங்குகிறது.
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில்சாதித்தது இல்லை. இதுவரை அங்கு 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26 தோல்விகளை சந்தித்துள்ளது. 4 வெற்றி, 7 டிராவையும் பதிவு செய்துள்ளது. கடைசியாக 1995-ம் ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஓர் அங்கமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடர் அமைந்துள்ளதால் சொந்த மண்ணில் வலுவாக களமிறங்குகிறது ஆஸ்திரேலிய அணி. இந்தத் தொடருடன் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற உள்ளடேவிட் வார்னர், 500 விக்கெட்கள் சாதனையை எதிர்நோக்கி உள்ள நேதன் லயன் ஆகியோர் சிறந்த திறனை வெளிப்படுத்தக் கூடும்.