சென்னை: தேசிய சீனியர் அட்யா பட்யா போட்டியின் ஆடவர், மகளிர் பிரிவில் தமிழக அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது. ஆடவருக்கான 36-வது தேசிய சீனியர் அட்யா பட்யா மற்றும் மகளிருக்கான 32-வதுசீனியர் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் அரை இறுதியில் தமிழகம், கேரள அணிகள் மோதின. இதில் கேரள அணி 13-11, 24-21 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அரை இறுதியில் தோல்வி கண்ட தமிழக அணிக்கு வெண்கலம் கிடைத்தது.
இதைப் போலவே மகளிர் அரை இறுதிப் போட்டியில் தமிழகம், மகாராஷ்டிர அணிகள் மோதின. இதில் மகாராஷ்டிரா அணி 14-11, 14-16, 18-17 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழகத்தை வென்றது. அரை இறுதியில் தோல்வி கண்ட தமிழக மகளிர் அணிக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. ஆடவர் இறுதிச் சுற்றில்கேரள அணி மகாராஷ்டிராவை வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. மகளிர் இறுதிச் சுற்றில், புதுச்சேரி அணி சிறப்பாக விளையாடி மகாராஷ்டிர அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.