விளையாட்டு

இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டராக உருவாகி வருகிறார் ஹர்திக் பாண்டியா

செய்திப்பிரிவு

ஹர்திக் பாண்டியா இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டராக உருவாகி வருகிறார் என்று தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் லன்ஸ் க்ளுசெனர் கூறியுள்ளார்.

இதுகுறித்து லென்ஸ் க்ளுசெனர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ''ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் சொத்தாக உருவாகி வருகிறார். தெனாப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாண்டியாவின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. அவரது ஆட்டத் திறமையின் மூலம் அழுத்தத்தை தென் ஆப்பிரிக்க அணிக்கு அளித்தார்.பாண்டியா தொடர்ந்து ஆட்டத்தில் முன்னேற்றம் கண்டு வருகிறார்.

அவர் பந்து வீச்சிலும் மேம்படுத்திக் கொண்டால் நிச்சயம் இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டராக உருவாவார்.

தென்னாப்பிரிக்காவுடன முதல் டெஸ்ட் போட்டியில் ஹர்திக் பாண்டியா 92/7 என்று தடுமாறிய இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா அற்புதமாக விளையாடி 95 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார். அத்துடன் இந்த இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளையும் பாண்டியா கைப்பற்றினார்.

SCROLL FOR NEXT