விளையாட்டு

சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: அரை இறுதிக்கு முன்னேறியது சாட்விக்-ஷிராக் ஜோடி; பிரனோய் அதிர்ச்சி தோல்வி

செய்திப்பிரிவு

ஷென்ஸென்: சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டனில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது.

சீனாவின் ஷென்ஸென் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர்இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில்உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது 13-வது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் லியோ ரோலி கர்னாண்டோ, டேனியல் மார்ட்டின் ஜோடியை எதிர்த்து விளையாடியது. 46 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாட்விக்-ஷிராக் ஜோடி 21-16, 21-14 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு முன்னேறியது.

ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் உலகக் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய், 5-ம் நிலை வீரரான ஜப்பானின் கோடை நரோகாவுடன் மோதினார். இதில் பிரனோய் 9-21, 14-21 என்ற செட் கணக்கில்அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

SCROLL FOR NEXT