லக்னோ: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
ஆப்கானிஸ்தான் அணி இதுவரை விளையாடி உள்ள 6 ஆட்டங்களில் தலா 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில்உள்ளது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும்முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கைஅணிகளை வீழ்த்தியதன் மூலம் தன் மீது உள்ள‘பலம் குறைந்த அணி’ என்ற முத்திரையை மாற்றிஉள்ள ஆப்கானிஸ்தான் மீண்டும் ஒரு முறை உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும்.
கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி, அஸ்மதுல்லாஓமர்ஸாய், ரஹ்மத் ஷா, ரஹ்மனுல்லா குர்பாஸ்,இப்ராகிம் ஸத்ரன் ஆகியோர் பேட்டிங்கில்நம்பிக்கை அளிக்கக் கூடியவர்களாக திகழ்கின்றனர்.லக்னோ ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கக்கூடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 3 பிரதான சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது. இந்த வகையில் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோருடன் நூர் அகமது களமிறங்கக்கூடும்.
நெதர்லாந்து அணியானது 6 ஆட்டங்களில் விளையாடி 4 தோல்வி, 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறையஇழந்துவிட்ட நெதர்லாந்துசமபலத்துடன் உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற போராடக்கூடும். கடைசியாக வங்கதேச அணியை 142 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்து87 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் இன்றைய ஆட்டத்தைஅணுகுகிறது நெதர்லாந்து.