ரோகித் சர்மா 
விளையாட்டு

ODI WC 2023 | “எங்களது முதல் இலக்கை எட்டியுள்ளோம்” - அரையிறுதி தகுதி குறித்து ரோகித்

செய்திப்பிரிவு

மும்பை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய அணி. அது குறித்து கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தது.

“உலகக் கோப்பை தொடர் எங்களுக்கு சென்னையில் தொடங்கியது. அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்பதே எங்களது முதல் இலகாக இருந்தது. அது இப்போது நிறைவேறியுள்ளது. மிகுந்த மகிழ்ச்சி. இந்த ஏழு போட்டிகளையும் நாங்கள் அணுகிய விதம் அபாரமாக இருந்தது. இந்த வெற்றியில் அனைவரது பங்கும் அடங்கியுள்ளது. ஒவ்வொருவரும் அவர்களது பொறுப்பை உணர்ந்து விளையாடி உள்ளனர். எங்களது அடுத்த இலக்கு இறுதிப் போட்டி” என ரோகித் சர்மா தெரிவித்தார்.

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இந்திகய அணி பேட்ஸ்மேன்கள் ஷுப்மன் கில், விராட் கோலி மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியரோ சிறப்பாக விளையாடி ரன் குவித்தனர்.

பந்துவீச்சில் ஷமி, சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் அபாரமாக செயல்பட்டனர். அதன் மூலம் இலங்கை அணி 55 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அடுத்தப் போட்டியில் இந்திய அணி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கொல்கத்தாவில் விளையாட உள்ளது.

SCROLL FOR NEXT