விளையாட்டு

மனம் தளர்ந்த பிரேசில் அணியின் பயிற்சியாளராக மீண்டும் துங்கா நியமிக்கப்பட்டார்

செய்திப்பிரிவு

உலகக் கோப்பை அரையிறுதியில் பயங்கரத் தோல்விக்குப் பிறகு ஸ்கொலாரி ராஜினாமா செய்ய பிரேசில் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக துங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

1994ஆம் ஆண்டு பிரேசில் உலக சாம்பியன் ஆன போது துங்கா பிரேசிலின் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2006ஆம் ஆண்டு துங்கா பிரேசில் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு பிரேசில் அணி கோப்பா அமெரிக்கா சாம்பியன் பட்டத்தையும், கான்ஃபெடரேஷன் கோப்பையையும் வென்றது. பிறகு 2010ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டிகளின் போது காலிறுதியில் பிரேசில் அணி நெதர்லாந்திடம் தோல்வி தழுவியதையடுத்து துங்கா பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

2014 உலகக் கோப்பை அரையிறுதியில் ஜெர்மனியிடம் 1-7 என்று நொறுங்கிய பிரேசில் 3வது இடத்திற்கான ஆட்டத்தில் நெதர்லாந்திடம் 3-0 என்று தோல்வி தழுவியது.

SCROLL FOR NEXT