ஸ்வப்னா பர்மான் 
விளையாட்டு

Asian Games 2023 | “திருநங்கையிடம் பதக்கத்தை இழந்துவிட்டேன்” - ஸ்வப்னா பர்மான்

செய்திப்பிரிவு

ஹாங்சோ: ஹாங்சோ ஆசிய விளையாட்டு போட்டியில் ஹெப்டத்லானில் இந்திய வீராங்கனை நந்தினி அகசாரா 5712 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவரை விட 4 புள்ளிகள் குறைவாக சேர்த்த மற்றொரு இந்திய வீராங்கனையான ஸ்வப்னா பர்மான் 4-வது இடத்தைப் பிடித்தார்.

இந்நிலையில், ஸ்வப்னா பர்மான் நேற்று தனது ட்விட்டர் பதிவில், “திருநங்கையிடம் நான், வெண்கல பதக்கத்தை இழந்துவிட்டேன். தடகள விதிகளுக்கு இது எதிரானது. எனவே எனது பதக்கத்தை பெற்று கொடுங்கள்” என தெரிவித்திருந்தார். சிறிது நேரத்தில் இந்த பதிவை அவர், நீக்கினார். தற்போது இந்த விவகாரம் தடகள உலகில் விவாத பொருளாக மாறி உள்ளது.

SCROLL FOR NEXT