அன்ரிச் நோர்க்கியா, மகலா 
விளையாட்டு

ODI WC 2023 | தென் ஆப்பிரிக்க வீரர்கள் அன்ரிச் நோர்க்கியா, மகலா விலகல்

செய்திப்பிரிவு

ஜோகன்னஸ்பர்க்: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் வேகப்பந்து வீச்சாளர்களான அன்ரிச் நோர்க்கியா, சிசண்டா மகலா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் அன்ரிச் நோர்க்கியா முதுகு வலி காரணமாகவும், சிசண்டா மகலா இடது முழங்கால் பிரச்சினை காரணமாகவும் விலகி உள்ளனர்.

இவர்களுக்கு பதிலாக ஆல்ரவுண்டரான அன்டில் பெலுக்வயோ, வேகப்பந்து வீச்சாளர் லிஸாத் வில்லியம்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 7-ம் தேதி இலங்கையுடன் மோதுகிறது.

அணி விவரம்: தெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்டு கோட்ஸி, குவிண்டன் டி காக், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், மார்கோ யான்சன், ஹெய்ன்ரிச் கிளாசன், கேசவ் மகாராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, அன்டில் பெலுக்வயோ, காகிசோ ரபடா, தப்ரைஸ் ஷம்சி, ராஸி வான் டெர் டஸ்ஸன், லிஸாத் வில்லியம்ஸ்.

SCROLL FOR NEXT