விளையாட்டு

இந்தியா - இலங்கை மூன்றாவது டெஸ்ட்: முரளி விஜய் சதம்

செய்திப்பிரிவு

இலங்கையுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி முரளி விஜய் சதம் கண்டார்.

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி, டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து முரளி விஜய்யும், ஷிகர் தவாணும் களம் இறங்கினர். நிதானமாக ரன் சேர்த்துக் கொண்டிருந்த இந்த ஜோடி, அணியின் ஸ்கோர் 42 ஆக இருக்கும்போது பிரிந்தது. திலுருவன் பெரேரா பந்து வீச்சில் ஷிகர் தவாண் 23 ரன்னில் இருந்தபோது ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து விஜய்யுடன் ஜோடி சேர்ந்த கோலி நிதானாமாக ரன் சேர்க்க, 170 பந்துகளில் முரளி விஜய் சதம் கண்டார். கேப்டன் விராட் கோலி  94 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 57 ஓவரில்   2 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்துள்ளது.

SCROLL FOR NEXT