விளையாட்டு

இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக முன்னிலை

செய்திப்பிரிவு

இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பாஜக 39 தொகுதிகளிலும், காங்கிரஸ் 22   இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

இமாச்சலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வராக வீரபத்ர சிங் பொறுப்புவகிக்கிறார். இந்த மாநில சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்தது.

முதல்வர் வீர்பத்ர சிங், முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமால் உட்பட முக்கிய பிரபலங்கள் மீண்டும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் 75.28 சதவீத வாக்குகள் பதிவாகின. காங்கிரஸும் பாஜக.வும் 68 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இமாச்சலில் 68 தொகுதிகளில் பதிவான வாக்குகள் தற்போது 42 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT