விளையாட்டு

SA vs AUS 3-வது ODI | ஆஸி.யை 111 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்கா!

செய்திப்பிரிவு

டர்பன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை ஆஸி. வென்றது. இந்நிலையில், தற்போது இரண்டு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இந்த சூழலில் 3-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்தது. மார்க்ரம் 102 ரன்கள் (நாட்-அவுட்), டிகாக் 82 ரன்கள் மற்றும் கேப்டன் பவுமா 57 ரன்கள் எடுத்திருந்தனர். 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸி. விரட்டியது.

டேவிட் வார்னர், ஹெட் மற்றும் கேப்டன் மிட்செல் மார்ஷ் என ஆஸி. அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர். இருந்தும் அதன்பிறகு களம் கண்டவர்கள் நிலைத்து நின்று ஆடாத காரணத்தால் 34.3 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி 227 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா. வார்னர், 56 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் மூலம் 111 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. ஜெரால்ட் கோட்ஸி, 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். ஆட்ட நாயகன் விருதை மார்க்ரம் வென்றார்.

SCROLL FOR NEXT