நடராஜன் 
விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரர்கள் இல்லாதது வருத்தம்: நடராஜன்

செய்திப்பிரிவு

சேலம்: உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் இடம்பெறாதது வருத்தமளிப்பதாக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தெரிவித்தார்.

சேலத்தில் அவர் கூறியது: உலக கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து அணிகளுமே பலமானவை என்பதால் சவால் நிறைந்த போட்டியாகவே இது இருக்கும். இந்திய அணியில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதேவேளையில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் இடம்பெறாதது வருத்தமாக உள்ளது என்றார்.

SCROLL FOR NEXT