விளையாட்டு

மோட்டோ ஜிபி பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் சத்குரு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலக அளவில் பிரபலமான பைக் பந்தயமாக மோட்டோ ஜிபி திகழ்கிறது. இந்த பந்தயம் முதன்முறையாக இந்தியாவில் வரும் 22-ம் தேதி 24-ம் தேதி வரை டெல்லி நொய்டா பெருநகர பகுதியில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியை ஃபேர் ஸ்ட்ரீட் ஸ்போர்ட்ஸ் என்ற அமைப்பு எடுத்து நடத்துகிறது.

இந்நிலையில் இந்த பந்தயத்தை சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கி வைக்க உள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். 22-ம் தேதி போட்டியை தொடங்கி வைக்கும் அவர், சர்க்யூட்டில் இரு சுற்றுகள் பைக்கில் ரைடு செல்வார் எனவும் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT