கே.எல்.ராகுல் 
விளையாட்டு

கே.எல்.ராகுல் தேறிவிட்டார் - அஜித் அகர்கர்

செய்திப்பிரிவு

காயத்தில் இருந்து கே.எல்.ராகுல் முழுமையாக குணமடைந்த போதிலும் விக்கெட் கீப்பிங் செய்யும் போது அசவுகரியமாக உணர்ந்ததால் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்த போதிலும் லீக் ஆட்டங்களில் அவர், கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் இலங்கை செல்லாமல் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை எட்டுவதற்கான முயற்சிகளில் கே.எல்.ராகுல் ஈடுபட்டார். தற்போது அவர், பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்வதற்கான முழு உடற்தகுதியுடன் இருப்பதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஐபிஎல் 2023 சீசனின் போது ராகுல் காயமடைந்தார். தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. உடற்திறனை மேம்படுத்தும் வகையில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் ராகுல் முகாமிட்டிருந்தார். அவர் பேட்டிங் மற்றும் கீப்பிங்க் பயிற்சியும் பெங்களூருவில் மேற்கொண்டார்.

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ராகுல் செயல்படுவார். அவருக்கு பேக்-அப் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் அணியில் இடம்பெற்றுள்ளார்.

SCROLL FOR NEXT