விளையாட்டு

டைமண்ட் லீக்கில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார் அவினாஷ் சேபிள்

செய்திப்பிரிவு

ஜியாமென்: சீனாவின் ஜியாமென் நகரில் டைமண்ட் லீக் தடகள தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் பந்தய தூரத்தை 8 நிமிடங்கள் 16.27 விநாடிகளில் கடந்து 5வது இடம் பிடித்தார்.

இதன் மூலம் வரும் 17ம் தேதி அமெரிக்காவின் யூஜின் நகரில் நடைபெற உள்ள டைமண்ட் லீக் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ஆடவருக்கான டிரிப்பிள் ஜம்ப்பில் பிரவீன் சித்ரவேல் 16.42 மீட்டர் நீளமும், அப்துல்லா அபுபக்கர் 16.25 மீட்டர் நீளமும் தாண்டி முறையே 5-வது மற்றும் 6-வது இடம் பிடித்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஏற்கெனவே ஈட்டி எறிதலில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான நீரஜ் சோப்ரா, நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர் ஆகியோரும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT