நீரஜ் சோப்ரா 
விளையாட்டு

ஜுரிச் டைமண்ட் லீக் | 85.71 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 2-ம் இடம் பிடித்தார் நீரஜ் சோப்ரா!

செய்திப்பிரிவு

ஜுரிச்: ஜுரிச் டைமண்ட் லீக் மீட்டில் ஈட்டி எறிதலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா. சுமார் 85.71 மீட்டர் தூரம் இதில் ஈட்டி எறிந்தார் அவர்.

அண்மையில் நடந்து முடிந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தி இருந்தார். இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற ஜுரிச் டைமண்ட் லீக் தொடரில் பங்கேற்றார். இறுதிச் சுற்றில் தனது முதல் வாய்ப்பில் 80.79 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாவது வாய்ப்பில் ஃபவுல் செய்தார். நான்காவது வாய்ப்பில் 85.22 மீட்டர் தூரமும், ஐந்தாவது வாய்ப்பில் மீண்டும் ஃபவுல் செய்தார். இறுதி வாய்ப்பில் 85.71 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து இரண்டாம் இடம் பிடித்தார்.

ஈட்டி எறிதலில் செக் குடியரசை சேர்ந்த ஜக்குப் வட்லெஜ்ச் 85.86 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்தார். ஜெர்மனியின் ஜூலியன் வெபர் இதில் மூன்றாம் இடம் (85.04 மீட்டர் தூரம்) பிடித்தார்.

இதே ஜுரிச் டைமண்ட் லீக் மீட்டில் இந்திய தடகள வீரர் ஸ்ரீசங்கர், நீளம் தாண்டுதலில் ஐந்தாம் இடம் பிடித்தார்.

SCROLL FOR NEXT