பாபர் அஸம் 
விளையாட்டு

102 ஒருநாள் இன்னிங்ஸில் 19 சதங்கள் பதிவு: ஹசீம் அம்லா, கோலியின் சாதனையை தகர்த்த பாபர் அஸம்

செய்திப்பிரிவு

முல்தான்: 102 ஒருநாள் இன்னிங்ஸ் விளையாடி 19 சதங்கள் பதிவு செய்துள்ளார் பாபர் அஸம். இதன் மூலம் குறைந்த இன்னிங்ஸ் விளையாடி 19 சதங்களை பதிவு செய்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் பாகிஸ்தான் கேப்டன்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது. இம்முறை போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகின்றன. செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த தொடரின் முதல் போட்டி பாகிஸ்தான் நாட்டின் முல்தான் நகரில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் விளையாடின. இந்தப் போட்டியில் 238 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றுள்ளது. இந்தப் போட்டியில் 131 பந்துகளை எதிர்கொண்ட பாபர் அஸம், 151 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த சதம் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 19-வது சதகமாக அமைந்தது. 102 ஒருநாள் இன்னிங்ஸ் ஆடி 19 சதங்களை பதிவு செய்ததன் மூலம் அவர் சாதனை படைத்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ் ஆடி 19 சதங்கள் பதிவு செய்த வீரர்கள்..

  • பாபர் அஸம் - 102 இன்னிங்ஸ்
  • ஹசீம் அம்லா - 104 இன்னிங்ஸ்
  • விராட் கோலி - 124 இன்னிங்ஸ்
  • டேவிட் வார்னர் - 139 இன்னிங்ஸ்
  • ஏபி டிவில்லியர்ஸ் - 171 இன்னிங்ஸ்
SCROLL FOR NEXT