நெட்டிசன்களில் உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு ஆப் (அப்ளிகேஷன்) பிரபலமாகும்.
அந்த வகையில், அண்மைக்காலமாக பலபேர் தங்களை எஸ்.பி.பி., சித் ஸ்ரீராமாகவும் சித்ரா, ஷ்ரேயா கோஷலாகவும் உருவகப்படுத்திக் கொள்ளவைத்திருக்கிறது ஒரு ஆப். அதுதான் ஸ்மூல் ஆப். இது, பாட்டு பாடுவதற்கான மேம்படுத்தப்பட்ட கரோகே ஆப்.
இதில், சிலர் பாடுகிறார்கள், பலர் பாடாய் படுத்துகின்றனர்.
அப்படி பாடாய் படுத்துபவர்களின் ஸ்மூல் ப்ளேலிஸ்ட் பல அடிக்கடி நம் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பக்கங்களில் நிரம்பி நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும்.
ஆனால், கடந்த இரண்டு நாட்களாக உலாவரும் ஒரு ஸ்மூல் பாடல் அதிகம் கவனிக்கப்பட்டுள்ளது. காரணம், பாட்டைப் பாடியவர் மாவட்ட ஆட்சியர் என்பதாலும் ஓரளவு நன்றாகவே பாடியிருக்கிறார் என்பதாலும்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் கேசவன், ஸ்மூல் ஆப்பில் பாடி இணையத்தில் வைரலாகி உள்ள அந்தப் பாடல் பாக்கியராஜின், தூறல் நின்னு போச்சு திரைப்படத்தில் வரும், "தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி" பாடல். உடன் பாடிய வித்துவிவேக் என்ற பெண்மணி ஸ்மூல் ஆப்பில் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடலைக் கேட்பதற்கான லின்க்: