படம்: எக்ஸ் 
விளையாட்டு

பெங்களூருவில் இந்திய அணி வீரர்கள் பயிற்சி

செய்திப்பிரிவு

பெங்களூரு: பெங்களூருவில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேற்று பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை பாகிஸ்தான், இலங்கை நாடுகளில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.

இந்நிலையில் போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் நேற்று பெங்களூருவில் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர். பெங்களூரு புறநகர்ப் பகுதியில் உள்ள அளூர் மைதானத்தில் நேற்று அவர்கள் வலைப் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.

SCROLL FOR NEXT