ராஜஸ்தானின் சவாய் மந்தோபூர் மாவட்டத்தில் தனியார் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் பலியானதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது அலுவலக ட்விட்டர் பக்கத்தில், "விபத்தில் உயிரை இழந்தவர்களின் குடும்பத்தை நினைத்துப் பார்க்கிறேன். மாநில அரசு நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
மீட்பு நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி என அனைத்தையும் மாநில அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
கிழக்கு ராஜஸ்தானில் சவாய் மாந்தோபூர் நகரில் 45 பயணிகளுடன் வந்த தனியார் பேருந்து இன்று (சனிக்கிழமை) காலை பனாஸ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆற்றில் மூழ்கி 32 பேர் பலியாகினர்.