கொல்கத்தா: துராந்த் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி சுற்றுக்கான அட்டவணையை போட்டி அமைப்பாளர்கள் நேற்று வெளியிட்டனர்.
இதில் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) சாம்பியனான மோகன் பகான், ஐஎஸ்எல் தொடரின் லீக் சுற்றில் முதலிடம் பிடித்து ஷீல்டு வென்ற மும்பை சிட்டி அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் வரும் 27-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. முன்னதாக 24-ம் தேதி குவாஹாட்டியில் நடைபெறும் முதல் கால் இறுதி ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி - இந்திய ராணுவம் அணிகள் மோதுகின்றன.
25-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் 2-வது கால் இறுதி ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - கோகுலம் கேரளா எஃப்சி பலப்பரீட்சை நடத்துகின்றன. 26-ம் தேதி குவாஹாட்டியில் நடைபெறும் 3-வது கால் இறுதி ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - எஃப்சி கோவாவுடன் மோதுகிறது.