அகில் ஷியோரன் 
விளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் அகில் ஷியோரன்

செய்திப்பிரிவு

பாகு: ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சூடுதலில் இந்தியாவின் அகில் ஷியோரன் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் அவர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

அஜர்பைஜானின் பாகு நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சூடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ரைபிள் 3-பொஷிசன் பிரிவில் இந்தியாவின் அகில் ஷியோரன் 450 புள்ளிகள் குவித்து வெண்கலப் பதக்கம் வென்றார். ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் ஷ்மிர்ல் 462.6 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், செக்குடியரசின் பீட்டர் நிம்பர்ஸ்கி 459.2 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

வெண்கலப் பதக்கம் வென்ற அகில் ஷியோரன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். இதுவரை பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கி சுடுதலில் இந்தியாவில் இருந்து 5 பேர் தகுதி பெற்றுள்ளனர். பவுனீஷ் மெந்திரட்டா (ஆடவருக்கான டிராப் பிரிவு), ருத்ராங்க் ஷ் பாலாசாஹேப் பாட்டீல் (ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள்), ஸ்வப்னில் குசலே (ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன்), மெஹுலி கோஷ் (மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள்) ஆகியோரும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT