விளையாட்டு

திருவள்ளூர் அருகே வயதான தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தங்களது மகன் நோய் வாய்ப்பட்ட துயரம் தாங்காமல் வயதான தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர். 

கிருஷ்ணாபுரம் கண்டிகை பகுதியில் வசித்தவர் கிருஷ்ணப்பரெட்டி(85), இவரது மனைவி கோவிந்தம்மாள்(80).

இவர்களது மகன் செல்வராஜ் நோய்வாய்ப்பட்டதால் சிகிச்சை பல நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் மகன் உடல் நிலை சரியாகவில்லையே என மனமுடைந்த தம்பதிகள் இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து பெரியபாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT