விளையாட்டு

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனி முதலிடம்

செய்திப்பிரிவு

சர்வதேச கால்பந்து தரவரிசையில் உலக சாம்பியனான ஜெர்மனி 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலக கோப்பையில் அபாரமாக ஆடியதன் மூலம் ஓர் இடம் முன்னேற்றம் கண்டு முதலிடத்தைப் பிடித்திருக்கிறது ஜெர்மனி.

இறுதிச்சுற்று வரை முன்னேறிய அர்ஜென்டீனா 3 இடங்கள் முன்னேறி, 2-வது இடத்தையும், உலகக் கோப்பையில் 3-வது இடத்தைப் பிடித்த நெதர்லாந்து 12 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தையும், கொலம்பியா 4 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தையும், பெல்ஜியம் 6 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தையும், உருகுவே ஓர் இடம் முன்னேறி 6-வது இடத்தையும் பிடித்துள்ளன.

அரையிறுதி வரை முன்னேறியபோதும் அதிக கோல்களை வாங்கிய பிரேசில், 4 இடங்களை இழந்து 7-வது இடத்தையும், முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் 7 இடங்களை இழந்து 8-வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்திய அணி 154-வது இடத்தில் இருந்து 3 இடங்கள் முன்னேற்றம் கண்டு 151-வது இடத்தைப் பிடித்துள்ளது.

SCROLL FOR NEXT