விளையாட்டு

புதுக்கோட்டையில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தார்.

சமீபத்தில் பெய்து வரும் மழையால், மின் கம்பிகள் அறுந்து தெருக்களில் கிடப்பது வாடிக்கையாகிவிட்டது. சென்னை கொடுங்கையூரில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள், மின் கசிவால் மின்சாரம் தாக்கி இறந்தனர்.

இதேபோல் திருவாரூரில் விவசாயி ஒருவர் அறுந்துகிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து பலியானார்.

சென்னை உட்பட பல ஊர்களில் மின் கசிவால் உயிர் இழக்கும் நிலை தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், இன்று (நவ- 8) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை அருகில் உள்ள வளவம்பட்டியைச் சேர்ந்த பழனிவேல் எனும் விவசாயி, வயலுக்குச் சென்றார். அப்போது வயலில் மின்கம்பி அறுந்து கிடந்தது. அதைக் கவனிக்காத நிலையில், அறுந்து கிடந்த கம்பியில் இருந்து மின்சாரம் கசிந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிவேல் பரிதாபமாக இறந்தார்.

SCROLL FOR NEXT