சென்னை: ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியின் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது இந்திய ஹாக்கி அணி. இந்தியாவுடனான தோல்வியால் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியது.
4 - 0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2 கோல் அடித்து முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது பாதியிலும் 2 கோல் அடித்து 4 - 0 என்று கணக்கில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எளிதில் வீழ்த்தியது.
இந்தப் போட்டிக்கு முன்பே அரையிறுதிக்கு முன்னேறி இருந்த இந்தியா, இதில் கூடுதல் நம்பிக்கையுடன் விளையாடியது. இதனால் போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி வாய்ப்பு மூலம் இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். இதேபோல் ஜுக்ராஜ் சிங் மற்றும் ஆகாஷ்தீப் சிங் ஆகியோரும் தலா ஒரு கோல் அடிக்க இந்தியா வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 13 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளதால் அரையிறுதியில் ஜப்பானை எதிர்கொள்ளவுள்ளது. அதேநேரம் தோல்வியால் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியது.