காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 மலேசிய ஜோடியான நிகோல் டேவிட், லோ வீ வெர்ன் ஆகியோரை இந்தியாவின் தீபிகா பல்லிக்கல்-ஜோஷனா சின்னப்பா ஜோடி வீழ்த்தியது.
தீபிகா பல்லிக்கல், ஜோஷனா சின்னப்பா இருவருமே தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் என்பது கவனிக்கத்தக்கது.
பிரிவு டி போட்டியான இதில் நம்பர் 1 மலேசிய ஜோடியை இந்திய ஜோடி 11-8, 11-5 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றது.
இதே ஜோடியை மலேசியாவில் நடைபெற்ற மூன்று நாடுகளுக்கு இடையிலான போட்டியிலும் தீபிகா ஜோடி வென்றது அதிர்ஷ்டமில்லை என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது.
இன்று தங்களது கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்து ஜோடியை எதிர்கொள்கின்றனர் தீபிகா-ஜோஷனா சின்னப்பா ஜோடி.
மகளிர் ஒற்றையர் பிரிவில் தீபிகா ஏற்கனவே காலிறுதிக்குத் தகுதி பெற, ஆடவர் பிரிவில் சவ்ரவ் கோஷல் முதல் முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.