அவ்னீத் கவுர் 
விளையாட்டு

உலகப் பல்கலைக்கழக விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 3 தங்கம்

செய்திப்பிரிவு

உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 3 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

சீனாவின் செங்டு நகரில் உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆடவர் வில்வித்தை காம்பவுண்டு பிரிவில் இந்திய வீரர் சங்கம்பிரீத் சிங் பிஸ்லா தங்கம் வென்றார். மகளிர் வில்வித்தை காம்பவுண்ட் பிரிவில் இந்திய வீராங்கனை அவ்னீத் கவுர் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

கலப்பு அணி பிரிவில் அமன் சைனி, பிரகதி ஆகியோர் அடங்கிய அணி தங்கப் பதக்கத்தை வென்றது. மேலும் ஆடவர் அணிப் பிரிவில் அமன் சைனி, சங்கம்பிரீத் சிங் பிஸ்லா, ரிஷப் யாதவ் ஆகியோர் அடங்கிய அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

மகளிர் பிரிவு அணிப் பிரிவு போட்டியில் அவ்னீத், பிரகதி, புர்வாஷா ஷெண்டே ஆகியோர் அடங்கிய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

SCROLL FOR NEXT