சென்னை, கோவை நகரங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பரவலாக பல்வேறு பகுதிகளிலும் பனி மூட்டம் படர்ந்திருந்தது.
கார்த்திகை மாதம் பனி சற்று அதிகமாக இருப்பது வழக்கம். இன்று கார்த்திகை முதல் நாள். மாதத்தின் முதல் நாளிலேயே பனிமூட்டம் உருவாகியுள்ளது. பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் விளக்குகளை ஒளிரவிட்டுச் சென்றனர்.
காலை 9.30 அளவில் சென்னை அண்ணாசாலையில் பனி மூட்டம் நிலவியது. மக்கள் சிலர் இது ரசிக்கும்படியாக உள்ளது என்றும் கூறினர். இதேபோல், கோவை நகரிலும் பனிமூட்டம் நிலவியது.