டோக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்திய வீரர் லக்சயா சென் தோல்வி கண்டு வெளியேறினார்.
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதியில் நேற்று இந்தியாவின் லக்சயா சென், இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டி ஆகியோர் மோதினர். இதில் லக்சயா சென் 15-21, 21-13, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டு வெளியேறினார்.