விளையாட்டு

ஜோலார்பேட்டை அம்மன் கோயிலில் ஒரு சவரன் நகை; உண்டியல் பணம் ரூ.70 ஆயிரம் திருட்டு

செய்திப்பிரிவு

ஜோலார்பேட்டை, அம்மன் கோயில் பூட்டை உடைத்து ஒரு சவரன் தங்க நகை, உண்டியல் பணம் ரூ.70 ஆயிரம் பணத்தை  திருடிச்சென்றுள்ளனர்.

ஜோலார்பேட்டை  அடுத்த ரெட்டியூர் பகுதியிலுள்ள அம்மன் கோயிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோயிலின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த ஒரு சவரன் தங்க தாலி சரடு மற்றும் உண்டியலை உடைத்து ரூபாய் 70 ஆயிரம்  பணத்தையும் திருடிச்சென்றனர்.

காலையில் கோவிலுக்கு வந்த பூசாரி இதைப்பார்த்து கோயில் நிர்வாகி கிருஷ்ணனுக்கு தகவல் அளிக்க அவர் அளித்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குபதிவு செய்து அம்மன் கோவிலில் திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

SCROLL FOR NEXT