விளையாட்டு

டி20 உலகக் கோப்பைக்கு அயர்லாந்து அணி தகுதி

செய்திப்பிரிவு

எடின்பர்க்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்தொடர் 2024ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் ஐரோப்பிய நாடுகளுக்கான பிரிவில் அயர்லாந்து 9 புள்ளிகளுடன் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.

எடின்பர்க் நகரில் நேற்று ஜெர்மனிக்கு எதிராக அயர்லாந்து விளையாடுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக இந்த ஆட்டம் ரத்தானது.

தகுதி சுற்று தொடரில் அயர்லாந்து அணியானது இத்தாலி, டென்மார்க், ஆஸ்திரியா, ஜெர்சி ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது. தனது கடைசி ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் மோதுகிறது. 8 புள்ளிகளுடன் உள்ள ஸ்காட்லாந்தும் டி 20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT